சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டக் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்.


கோவை: சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், ஜே.கிருஷ்ணாபுரம் வருவாய் கிராமம், வலசுப்பளயத்தில் உள்ள செல்வராஜ் நிலத்திற்கு பிஏபி பாசனத் திட்டத்தில் ஆயக்கட்டு நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகில் உள்ள விவசாயி ஷோபனாவின் நிலத்தின் வழியாக அரசு சார்பில் கான்கிரீட் அமைக்கப்பட்டு தண்ணீர் வரும் கால்வாயும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயி ஷோபனா, சிறு விவசாயி செல்வராஜுக்கு பி.ஏ.பி தண்ணீரை விடாமல் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாகத் தடுத்துள்ளதாகவும், கால்வாயையும் மண்ணை கொட்டி மூடி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவசாயி செல்வராஜ் கடந்த ஆறு மாதங்களாக சூலூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.



ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாயை மீட்டு, தண்ணீர் ஏற்பாடு செய்து தரக் கோரி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.



ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயி ஷோபனா மீது வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கோரிக்கை நிறைவேறும் வரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் சூலூர் வட்டாட்சியர் மற்றும் பிஏபி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



சேதப்படுத்தப்பட்ட வாய்க்காலை உடனடியாக சரி செய்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருவதாகவும் உறுதியளித்தனர்.

கோரிக்கைகளை வரும் 26ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மீண்டும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்றுத் தற்காலிகமாக இன்று விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...