காரமடை நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் குப்பைகள் அள்ளும் விவகாரத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சாதகமான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு.


கோவை: காரமடை நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் வகையில் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதிக் கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியின் அவசரக்கூட்டம் நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானம் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதில் நகராட்சியில் உள்ள குப்பைகளைச் சேகரிக்க தற்போது 120 தற்காலிக பணியாளர்களும், 30 நிரந்தர பணியாளர்கள் உள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் காரமடை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதி கோரப்பட்டது.



இதனால் ஏற்கனவே பணியில் உள்ளத் துப்புரவுப் பணியாளர்களின் பணி பாதிக்கப்படுவதுடன் கொரானோ காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியற்றியவர்களுக்கே இந்த நிலையா? என அனைத்து கவுன்சிலர்களும், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் நிறுத்தி வைக்கபட்டுவதாக நகராட்சி தலைவர் உஷா அறிவித்தார்.

இதனையடுத்து துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்த நகராட்சி தலைவர் உஷா, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...