முருங்கையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி..? - அதிகாரி விளக்கம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் முருங்கையில் பூச்சிநோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சிக் காட்டுப்பாட்டுமுறை குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.


கோவை: முருங்கை விவசாயத்தில் பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறை குறித்து பொங்கலூர் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா கூறியதாவது:

மழை மற்றும் பனி சீசனில் முருங்கையில் கம்பளி புழு, இலை புழு தாக்குதல் இருக்கும். இளம் குருத்து மற்றும் இலைகளில் இவை குவியலாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த புழுக்களின் முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். தாய் பூச்சிகளை அழிக்க விளக்கு பொறிகளை ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம்.

மீன் எண்ணெய் ரோசின் கோப் லிட்டருக்கு 25 கிராம் வீதமும், கார்பரில் 50 டபிள்யூ பி மருந்தை லிட்டருக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து செடிகளின் மேல் தெளித்து கட்டுப்படுத்தலாம். வரும் மாதங்களில் காய்களில் ஈ தாக்குதல் இருக்கும். காய்கள் பிளந்தும், காய்ந்தும் காணப்படும்.

காய்களில் தேன் போன்ற திரவம் வடியும். நோய் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். மரங்களை சுற்றி நிலத்தை உழுது கூட்டு புழுக்களை அழிக்கலாம். நிம்பிடைன் மருந்தை 50 சதவீத காய் உருவான பின்பும் 35 நாட்கள் கழித்தும் லிட்டருக்கு மூன்று மி.லி., வீதம் கலந்து தெளித்து முருங்கையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...