பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்

காருண்யா பல்கலைக்கழகத்தில் 5 கிலோ தங்கம் 120 கோடிக்கான கணக்கில் வராத முதலீடுகள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சமன் அளிக்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக்கழகத்தில் 5 கிலோ தங்கம், ரூ.120 கோடிக்கான கணக்கில் வராத முதலீடுகள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை காருண்யா பல்கலைக்கழகம் உட்பட பால் தினகரனுக்கு சொந்தமான 10 இடங்களில் கடந்த வாரம் இரவு பகலாக வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் கோவையில் உள்ள அனைத்து இடங்களிலும் வருமான வரி சோதனை முடிவடைந்தது பிற இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஒருசேர கொண்டுவரப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் ஐந்து கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூன்று நாள் சோதனையில் ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் கட்டப்படாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சமன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், பால் தினகரன் அடுத்த வாரம் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் வருமான வரித்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...