தாராபுரத்தில் பராமரிக்கப்படாத 2,250 கிலோ நெல் விதைகளை விற்க தடை!

தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் நெல் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்த ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி, முறையாக பராமரிக்கப்படாத 2,250 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் நெல் விதை விற்பனையகங்கள், விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி ஆய்வு செய்தார்.

அப்போது விற்பனை உரிமம், இருப்பு மற்றும் விலை விவர பலகை, கொள்முதல் பட்டியல், பதிவேடுகள், பதிவுச் சான்றிதழ், முளைப்பு திறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களில் ஆய்வு செய்த போது, விதை இருப்பிற்கும், பதிவேடு இருப்பிற்கும் வேறுபாடு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.72 ஆயிரம் மதிப்பிலான 2,250 கிலோ எடை அளவிலான நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளுக்கு பட்டத்திற்கு (காலம்) ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின் போது தாராபுரம் மற்றும் காங்கயம் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...