மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் சூரிய ஜெயந்தி வைபவம்!

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், ரத சப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வைபவம் மற்றும் சூரிய ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது.

ரதசப்தமியை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் சூரிய பிரபை புறப்பாடு நடத்தப்பட்டு சூரியனுக்கு விசேஷ ஆர்த்தி நடைபெற்றது.

தொடர்ந்து மலையப்ப சாமி சேஷ வாகனம், அன்னபக்ஷி வாகனம், அனுமந்த வாகனம், போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.



முன் மண்டபத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஒவ்வொரு வாகனங்களிலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது பக்தர்கள் பேரீட்சை, அவல், பழங்கள் போன்றவற்றை தீபத்துடன் தட்டில் எடுத்து சுவாமிக்கு காணிக்கையாக அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு, கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பியவாறு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...