கோவையின் ஒரு நாள் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் போட்டி - அசத்திய மாணவிகள்..!

கோவையில் 'ஒரு நாள் ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் விருதுகள் வழங்கி பாராட்டினர்.


கோவை: கோவையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி, யங் இந்தியன்ஸ் என்ற அமைப்புடன் இணைந்து, கல்லூரி மாணவர்களுக்கான 'ஒரு நாள் – மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர்' என்ற தனித்துவமான போட்டியை கோவையில் நடத்தியது.

இந்தப் போட்டியில் பதிவு செய்து பங்கேற்கும் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, மின் ஆளுமை, போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்பு, விபத்தில்லா சாலைகள், சைபர் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் தொடர்பான மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மாநகராட்சியால் கண்டறியப்பட்ட சிக்கல் அறிக்கைகள் வழங்கப்பட்டது.

இதில், வழங்கப்பட்டுள்ள சிக்கல் அறிக்கைகளுக்கு புதுமையான தீர்வுகளை மாணவர்கள் வழங்க வேண்டும் என்பதே இப்போட்டி. இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையருடன் ஒரு நாளை செலவிடுவார்கள்.

மேலும், வெற்றி பெறுபவர்கள் அனைவருக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 100% உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதிச்சுற்று கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் அருண், தலைமை நிர்வாக அதிகாரி யாஸ்மின், யங் இந்தியன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் வைஷ்ணவி, செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த புதுமையான போட்டியில், ஒரு நாள் மாநகராட்சி ஆணையராக செயிண்ட் ஜோசப் பள்ளி மாணவி அர்ஷிதா, ஒரு நாள் காவல்துறை ஆணையராக பி.ராஜேஸ்வரி, ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக அனுவர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.







இவர்கள் 3 பேருக்கும் விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, 100% உதவித்தொகையுடன் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிலும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்தப் போட்டி ஒரு சமூக ஆராய்ச்சி.

கோவை நகரில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை மாணவர்களிடத்தில் கொடுத்து அந்தப் பிரச்சனையின் மீது அவர்களின் பார்வையும், தீர்வும் எப்படி உள்ளது என்பதைக் கண்டறியும் படி இந்த போட்டியை வடிவமைத்தோம்.



இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது. பிரச்சனைகளை கடந்து போகும் அதற்கு சரியான தீர்வு கண்டறிய வேண்டியது எதிர்கால இளைஞர்களின் கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.



இதனைத் தொடர்ந்து, மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, ஸ்மார்ட் சிட்டி, பெண்கள் பாதுகாப்பு, அரசு பள்ளிக் குழந்தைகள் திறன் வளர்த்தல் என பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தீர்வுகளும், திட்டங்களும் இந்தப் போட்டியில் கொடுத்துள்ளனர்.

அது ஒருங்கிணைக்கப்பட்டு, ஆலோசிக்கப்பட்டு தேவைப்படும் இடங்களில் செயல்படுத்தப்படும். அரசுப்பணிக்கு பயிலும் மாணவர்கள் மக்கள் நலனுக்கு எந்தத் திட்ட மானாலும் குறுகிய காலமல்லாமல் நீண்ட கால நோக்கில் அவர்களுக்கு பயன்படும் திட்டங்கள் வகுக்க வேண்டும். அதன்படியே அரசும், நிர்வாகமும் திட்டமிட்டு செயல்படுத்துகிறது.



மேற்கத்திய நாடுகளில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பல சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அதற்கு நன்மதிப்பு சான்றிதழ் அரசு வழங்குகிறது. அந்தச் சான்றிதழ் அவர்களின் மேற்படிப்பு, வேலை வாய்ப்புக்கான மதிப்பைக் கூட்டுகிறது.



அதுபோல் நம் நாட்டிலும் மாணவர்கள் பல சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும். நன்மதிப்பு ரேட்டிங் முறையும் இங்கு கொண்டு வந்தால் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...