'வடமாநில தொழிலாளர்கள் வருகையை கட்டுப்படுத்துங்கள்!' - பொள்ளாச்சியில் தென்னை விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

தென்னை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வட மாநில தொழிலாளர்கள் வருகையைக் கட்டுப்படுத்தகோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தென்னை தொழிலாளர்கள் போராட்டம்.



கோவை: தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தென்னை தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தென்னை தொழிலாளர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதை நம்பி தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட தென்னை சார்ந்த தொழில்களை நம்பி லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில் பீகார், ஒரிசா உத்தரப்பிரதேசம், போன்ற வட மாநிலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் முகாமிட்டு விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதால், இத்தொழிலை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இன்று மக்கள் விடுதலை முன்னணி தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது வட மாநில தொழிலாளர்கள் வருகையைக் கண்டித்தும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



அப்போது அவர்கள் கூறியதாவது,

தென்னை விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தென்னை சார்ந்த தொழில்களை நம்பி வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர். வட மாநில தொழிலாளர்களின் வருகையால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கொத்தடிமைகளாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும். தென்னை தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். கூலி நிர்ணயம் செய்யத் தனிக் குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்காவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...