கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 54 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பத்தில் பலியானவர்களுக்கு ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆர்.எஸ் புரம் பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன், மத்திய தென்னை வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் வலியுறுத்தினார். மேலும் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலைவழக்கில் குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யாமல் காலதாமதம் செய்வது வெட்கக்கேடு எனவும், தமிழக அரசியலில் உள்ளவர்கள் ஆவியை பார்த்து பயப்படுவது போல காவியை பார்த்து பயப்படுவதாகவும் கூறிய அவர், வருங்காலங்களில் தமிழகத்தில் காவி கொடி பறந்தேதீருமெனவும் தெரிவித்தார். இதையடுத்து தடையை மீறி அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.