மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள்.. நிதி ஒதுக்கீடு.. முக்கிய அறிவிப்புகள்.. என்ன..??

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் வரி உயர்வு, குறைப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறித்த தொகுப்பு.


டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் மத்திய அரசின் 2023 - 2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை இன்று காலை, 11:00 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.



இந்நிலையில், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், நடுத்தர மக்களை கவர பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை வாருங்கள் பார்க்கலாம்...

வேளாண் துறைக்கு கூடுதலாக 20 லட்சம் கோடி ரூபாய் கடன் வசதி அளிக்கப்படும்.

போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு.

தோட்டக்கலை துறைக்கு 2,200 கோடி நிதி ஒதுக்கீடு.

உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு 2 லட்சம் கோடி ஒதுக்கீடு.

மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு.

சிறு, குறு, தொழில்களுக்கு கடன் உறுதி திட்டத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கடன் வட்டியை 1% குறைக்க முடிவு.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு.

இதேபோல், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வரி உயர்வு மற்றும் வரி குறைப்பு குறைப்பு குறித்து வாருங்கள் பார்க்கலாம்...

1) பட்ஜெட்டின் மிக முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுவது தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு தான்.

2) அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.

3) மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க புதிய இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படும்.

4) 157 புதிய நர்சிங் கல்லூரிகள் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய இடங்களில் அமைக்கப்படும்.

5) 5ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

6) சுற்றுலாத் துறையை மேம்படுத்த தனி செயலி உருவாக்கப்படும்.

7) மகிளா சம்மான் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும். பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு செய்யும் வகையில் 7% வட்டி வழங்கப்படும்.

8) மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்த புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

9) கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அடுத்த ஓராண்டுக்கு நீட்டிப்பு. இதனால் 80 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்.

10) ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அது சார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

11) நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் ஹெலிபேடுகள் உருவாக்கப்படும்.

12) சிகரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களுக்கு 16 சதவீதம் வரை வரி உயர்த்தப்படும்.

13) தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு.

14) லித்தியம் ஐயான் பேட்டரி இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

15) டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைப்பு.

16) செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி, 21% இருந்து 13% ஆக குறைப்பு.

17) சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...