உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வீரர்கள் கோரிக்கை!

உடுமலையில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த விளையாட்டு துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து மேம்படுத்த விளையாட்டுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு திறன்களை வளர்க்க நகரின் மத்தியில் 6.30 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டு நேதாஜி விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டது.



பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தை பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், உடுமலை நகரின் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய பயிற்சிக்களமாக நேதாஜி விளையாட்டு மைதானம் விளங்கி வருகிறது.



ஹாக்கி, கிரிக்கெட், கூடைப்பந்து உட்பட விளையாட்டு வீரர்கள் நாள்தோறும் மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சியும் மேற்கொள்கின்றனர்.



மைதானத்தில் பயிற்சிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றன.

இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின் ஸ்கேட்டிங் பயிற்சிக்கான தளம் மட்டும் கட்டப்பட்டு உள்ளது. பிற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மைதானத்தின் ஒரு பகுதி புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் குழுவினர் நகராட்சி நிர்வாகம் வருவாய் துறையினர் உள்ளிட்ட குழு சார்பில் கடந்த 2019 ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், நேதாஜி மைதானத்தில் 6 கோடி ரூபாய் செலவில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்படும் நடைபயிற்சி மேற்கொள்வர்களுக்கு தனியாக இடம், தடகளப் போட்டியில், பங்கேற்கும் வேலைகளுக்கு பயிற்சி செய்யவும், மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தவும் தனி ட்ராக் அமைக்கப்படும்.

இதற்கு தேவையான கருத்துருவை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக தயாரித்து சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த நேதாஜி மைதான மேம்பாடு விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்போடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்திட்டத்தை கண்டு கொள்வதில்லை எனக்கூறும் வீரர்கள், மழை காலங்களில் கூடைப்பந்து மைதானத்தை ஒட்டி தண்ணீர் தேங்குவதும் ஸ்கேட்டிங் தளத்தின் அருகில் புதர் மண்டி விஷச்சந்துக்கள் நடமாடுவதும் தொடர்கதையாக உள்ளதாக கூறுகின்றனர்.

மைதானத்தின் மையப் பகுதிகள் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறுவதால் கிரிக்கெட் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளது.

நூற்றுக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறமையையும் அவர்களின் கனவையும் நினைவாக்கும் உதவும் மைதானத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...