புதிய வாக்காளர்களுக்கு தமிழகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு மாநில தலைமை தேர்தல் ஆலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தில் தங்களின் கைப்பேசி எண்ணை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
இந்த அடையாள எண்ணை தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
தங்களுடைய கைப்பேசி எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள் தேர்தல் துறையின் கட்டனமில்லாத உதவி எண் 1950-ஐ தொடர்புகொண்டு கைப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அடையாள எண் அனுப்பப்படும்.
இதனைக்கொண்டு அவர்களும் தங்களுடைய புகைப்பட அடையாளச் சான்றை காண்பித்து அரசு இ-சேவை மையங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.