கோவையில் கார் வெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தைப்பூச திருவிழா - போலீஸ் குவிப்பு!

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காக வழக்கத்தை விட கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் மாதங்களில் ஒன்று தை மாதம் தான். ஏனென்றால், தை மாதம் பிறந்தவுடன் வருடந்தோறும் தைப்பூச நன்னாளில் முருக பெருமானுக்கு பக்தி பரவசத்துடன் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை மட்டுமின்றி மருதமலை போன்ற புகழ்பெற்ற முருகன் கோயில்களில், முருகன் கடவுள் குடிகொண்ட அனைத்து கோயில்களிலும் தைப்பூச பூஜைகள் நடக்கின்றன.



அந்த வகையில் கோயமுத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயிலில் ஈஸ்வரன் மற்றும் பார்வதி, முருகன் கடவுள் குடிகொண்டதனால் தை பூசைகள் நடக்கும். இந்த நிலையிலே இரண்டு வருடங்களாக கொரோனாவின் காரணமாக பக்தர்கள் இன்றி தைப்பூச பூசைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி பக்தர்கள் புடை சூழ பூசைகள் நடக்கின்றன. இந்த நிலையில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் போலீசார் வழக்கத்தை விட கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.



இந்த நிலையில் இந்து அமைப்புகள், பாஜகவினர் வழிபடும் முக்கிய கோயில்களில் ஒன்றான கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அதிகளவில் மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.



இந்நிலையில், முந்தைய நிகழ்வுகளை மனதில் கொண்ட காவல்துறை அதிகாரிகள் கோட்டை ஈஸ்வரன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக வழக்கத்தை விட கூடுதல் போலீசாரை ஈடுபடுத்தியுள்ளனர்.



மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையாளர் சிலம்பரசன் மேற்பார்வையில், உதவி ஆணையாளர் வீரபாண்டி தலைமையிலான 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 230க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...