பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற தேர் திருவிழாவில் மேளதாளங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.
பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூச திருநாளை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்தோடு தைப்பூசத் திருவிழா தொடங்கியது.
முருகருக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் உச்சிக்கால பூஜைகளோடு தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி உற்சவர் சிலை தேரில் பவனி நடைபெற்றது.
பக்தர்களின் அரோகரா முழக்கத்தோடு வானவேடிக்கைகளுடன், மேள தாளங்கள் முழங்க, முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.