தாராபுரத்தில் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கிய போக்குவரத்து போலீசார்

தாராபுரம் வழியாகத் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கல்.


திருப்பூர்: பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்குப் போக்குவரத்து போலீசார் ஒளிரும் பட்டைகளை பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.

திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், எடப்பாடி உள்ளிட்ட பல பகுதியிலிருந்து தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக காலை முதல் இரவு வரை விடிய விடியப் பக்தர்கள் பாதயாத்திரையாகச் சாலையில் நடந்து செல்கின்றனர்.

இதனால் விபத்திலிருந்து பாதுகாப்பாகச் செல்ல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பழனி செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கா வண்ணம் பாதயாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிகாரிகள் அலங்கியம் ரவுண்டானா சாலையில் நின்று பாதயாத்திரை செல்லும் பக்தர்களை வரிசையில் நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.

பின்னர் சாலையில் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், ஒளிரும் பட்டைகளைப் பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...