மத்திய அரசைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சியின் பொதுமக்கள் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்த்ததாகக் கூறி மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்.பி.ஐ பிரதான அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதற்கு கோவை மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று, மோடி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், அதானிக்கும் அம்பானிக்கும் எல்ஐசி சொத்துக்களை விற்கக் கூடாது, எஸ்பிஐ மற்றும் எல்ஐசியில் முதலீடு செய்தது நடுத்தர வர்க்கத்தினர், அவர்கள் சேமித்த பணம், அதனை விற்கக் கூடாது, கார்ப்பரேட் முதலாளிகளை வளர்க்கக்கூடாது, என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் கருப்புசாமி, எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சியில் பொதுமக்களின் முதலீடுகளை, மோடியின் நண்பர்களான அதானிக்கும் அம்பானிக்கும் மோசடியாக அவரது நிறுவனங்களில் முதலீடு செய்வதாக கூறி, பிற்காலத்தில் அந்தக் கடனை வாராத கடனாக மாற்றி வைப்பதற்காக இந்த மோசடி நடைபெறுகிறது.

பொதுமக்களின் பணத்தை அபகரிக்கும் பிரதமர் மற்றும் மந்திரி சபையின் கூட்டு மோசடியை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் ஏ1(குற்றவாளி) எனவும் நிதி அமைச்சர் ஏ2(குற்றவாளி). இது குறித்து நிதி அமைச்சர் இடம் விளக்கம் கேட்டால் மழுப்பலாகதான் பதில் அளிக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...