வட இந்தியர்கள் வருகையை தடுக்க கோரி கட்டிடத் தொழிலாளி மகள் எழுதிய கவிதையுடன் ஆட்சியரிடம் மனு

கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாலமுருகன் என்பவர் வட இந்தியர்களின் அராஜகத்தை ஒடுக்கக் கோரி மகள் எழுதிய கவிதையுடன், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.



கோவை: கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டிடத் தொழிலாளியான இவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் வட இந்தியர்களால் வேலையின்றி தவிப்பதாகவும், கட்டிடத் தொழிலில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.



மேலும் இதேபோல் வட இந்தியர்களின் ஆதிக்கம் நீடிக்கும் நிலையில் இது தமிழ்நாட்டுக்குப் பேராபத்து எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில், தனது மகள் எழுதிய கவிதை தொகுப்பையும் இணைத்துள்ளார்.

'பேனா,பென்சிலுக்கும் சண்டையிடும் அரசியல்வாதிகளுக்கும், விஜயா? அஜித்தா? என சண்டையிடும் ரசிகர் பெருமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள்...அழிந்து வரும் தமிழகத்தையும், எனது தமிழ் மண்ணையும் மீட்டெடுப்போம்.. வட இந்தியர்களிடமிருந்து என்னை போன்றவர்களையும், நமது வருங்காலத்தையும் போற்றி பாதுகாப்போம், போராடுவோம் தமிழகத்தை மீட்கும் வரை' இப்படிக்கு தமிழனின் ஒருவர் தமிழ் மதி என அந்த கவிதை தொகுப்பு முடிகிறது.



எங்கள் பிள்ளைகள், வட இந்தியர்களுக்கு அடிமையாகி விட கூடாது என்று ஆதங்கப்படும் பாலமுருகன், தனது கோரிக்கை மனுவால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...