உடுமலையில் மூங்கில் தயாரிப்பு பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மூங்கிலால், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாய சாகுபடி பணிகளில், மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தன. விதை துாவுதல், அறுவடையின் போது விளைபொருட்களை சேகரித்தல், தானியங்களை சுத்தப்படுத்துதல் உட்பட அனைத்துப்பணிகளுக்கும், மூங்கில் கூடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தக்காளி பழங்களை, மூங்கில் கூடையில் அடுக்கி, சந்தைகளுக்கு எடுத்துச்செல்வார்கள். இவ்வாறு, ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் தவிர்க்க முடியாத பயன்பாட்டில் இருந்தன. பின்னர், பிளாஸ்டிக் பெட்டிகள் வேளாண் அறுவடை பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது.



மக்காச்சோளம் மற்றும் இதர தானிய சாகுபடிகளிலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்தது. இதனால், மூங்கில் கூடை பயன்பாடும், உற்பத்தியும் குறைந்து, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், உடுமலை நகரிலுள்ள தொழிலாளர்கள், பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் தொழிலை கைவிடாமல், உற்பத்தி பொருளையும் மாற்றி, வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.



தொழிலாளர்கள் கூறுகையில், கூடைகள் தயாரிப்பில், மூலப்பொருளான மூங்கில் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. இருப்பினும், புதிய வகை பொருட்கள் தயாரிப்பால், தொழிலை கைவிடாமல், தொடர்கிறோம்.

கண்காட்சி மற்றும் இதர வணிக பகுதியில், மூங்கிலால் ஆன பொருட்களை விற்பனை செய்ய, அரசு எங்களுக்கு தனியாக கடை ஒதுக்கினால், மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். விவசாயிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மூங்கில் கூடைகளை பயன்படுத்தினால், எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்,' என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...