உடுமலையில் சின்னவெங்காய அறுவடைப் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம். வெங்காயத்தை இருப்புவைத்து விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப் பாசனம் மூலம் சொட்டு நீர் அமைத்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



விலை ஏற்ற இறக்கங்களை பொருத்தே சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் இதை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

வெங்காயம் விதை மூலம் நாற்றங்கால் அமைத்த 40 நாட்களுக்கு பிறகு, அவற்றை பிடுங்கி நடவு செய்தும், விதை வெங்காயம் வாங்கியும் சாகுபடி செய்யப்படுகிறது.



இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:

ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். ஒரு ஏக்க ருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், தண்ணீர் திருப்புதல் என ரூ.60 ஆயிரம் முதல் ரூ. 70ஆயிரம் வரை செலவாகிறது.

சின்ன வெங்காயம் 60 முதல் 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். சின்ன வெங்காயம் 4 முதல் 5 மாதங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்து, விலை அதிமாகும் நேரங்களில் விற்பனை செய்கிறோம். இதனால், விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது.

சின்ன வெங்காயம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்போது அறுவடை செய்யப்படுகிறது.அறுவடை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் வெயிலில் உலர வைக்கப் பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...