ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக உள்ளது - சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து

ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக உள்ளதாகவும், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ்., மையங்களாக மத்திய அரசு செயல்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து.



கோவை: ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு நேரெதிராக இடதுசாரிகள் சித்தாந்தம் உள்ளதால் பாஜகவின் இறுதிக்கட்ட இலக்கு என்பது இடதுசாரிகளாகவே இருக்கும் என்றும், ஆனால், மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட சி.பி.ஐ அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், பாஜகவை சேர்ந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும், ஆளுநர்கள் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக உள்ளதாக கூறிய அவர், ஆளுநர் என்பதற்கு பொருள் என்ன என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநர் சனாதன கருத்துகள் தெரிவித்து வருவது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், மாநிலத்திற்கு மாநிலம் வேறு கட்சிகளாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துகொண்டு பாஜகவிற்கு எதிராக நாட்டை பாதுகாக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் செயல்பட வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சி என்பது நிராகரிக்க முடியாது என்றும், கட்சிகளிடையே முரண்பாடு இருந்தாலும், அதைக் கடந்து ஆர்.எஸ்.எஸ்.சை, பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து நாட்டை காக்க பொதுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றவர், பாஜக ஆட்சியைப் பிடித்தவுடன், இடதுசாரிகள் வீழ்ந்து வருவது என்பதைத் தான் ஏற்கவில்லை என்றும், தேர்தல் அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டார்.

மேலும் அரசியல் கொள்கையில் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கு நீடிப்பதனால் தான் சமீபத்தில், பிரதமர் கம்யூனிசம் என்பது அபாயகரமான சித்தாந்தம், அழிவை ஏற்படுத்தி விட்டு போய்விடும் என்று சொன்னதை குறிப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்திற்கு நேரெதிராக இடதுசாரிகள்சித்தாந்தம் உள்ளதால் பாஜகவின் இறுதிக்கட்ட இலக்கு என்பது இடதுசாரிகளாகவே இருக்கும் என்றும், ஆனால், மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக டி.ராஜாவை தமிழ்நாடு பலசமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...