உடுமலையில் பனிப்பொழிவால் தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் தக்காளி விலை 14 கிலோ கொண்ட பெட்டி 350 ரூபாயில் இருந்து 160 ரூபாயாக சரிவு. இந்த விலை வீழ்ச்சியால் போக்குவரத்து செலவுக்குக்கூட கட்டுபடியாகாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை.


கோவை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏறத்தாழ, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி தற்போது சாகுபடிசெய்யப்பட்டுள்த. இங்கு விளையும் தக்காளியை, விவசாயிகள் உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை வருகின்றனர்.



உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வரும் வியாபாரிகள், தக்காளியை கொள்முதல் செய்துவருகின்றனர். கடந்த சில வாரமாக, உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வியாபாரிகள் வருகை குறைந்ததால், விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்த மாதம், 14 கிலோ கொண்ட பெட்டி, 350 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது ரகத்திற்கு ஏற்ப, 160 முதல், 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. தொடர் பனிப்பொழிவு காரணமாக தக்காளிச் செடி மற்றும் காய்கள் பாதித்து மகசூல் குறைந்துள்ள நிலையில், தொடர் விலை சரிவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, ஆயிரம் 40 வரை ரூபாய் செலவாகிறது. நோய் தாக்குதல், சீதோஷ்ண நிலை மாறி அதிக பனிப்பொழிவு காரணமாக, தக்காளி சாகுபடி பாதித்துள்ளன. அறுவடை செய்த பழங்களில், பெருமளவு அழுகி வீணாகி வருகிறது.

இந்நிலையில், உடுமலை சந்தையில், தக்காளி தொடர்ந்து விலை வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், போக்குவரத்து செலவுக்குக்கூடகட்டுபடியாகாத நிலை உள்ளது. தக்காளி விலை வீழ்ச்சியை தடுக்க, சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கவும், தக்காளி சாஸ் தொழிற்சாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...