வடமாநில தொழிலாளர்கள் வருகையை கட்டுப்படுத்துங்கள்..! - திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூருக்கு வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அவர்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளூர் தொழிலாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூரை சேர்ந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், திருப்பூர் மாவட்டத்திற்கு அதிகளவில் வருகை தரும் வட மாநில தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதன் காரணமாக பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் அவர்களையே வேலைக்கு சேர்க்கின்றனர். இதனால், திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்களுக்கு பின்னலாடை நிறுவனத்தில் தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் அவர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்து வருகின்றனர்.

ஆனால் தாங்கள் மாத வாடகை மற்ற செலவுகள் என அதற்கு தேவையான சம்பளம் கேட்பதால் தங்களை நிராகரித்து வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தி வருவதாகவும் தெரிவித்தனர்.



எனவே திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் மீட்கப்படும் என வலியுறுத்தினர்.

மேலும் தங்களது கோரிக்கைகளை திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாகவும் அளித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...