ஜி.ஆர்.டி கலை அறிவியல் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'சுவட்ச் மாரத்தான்' என்னும் தூய்மை பணி நிகழ்ச்சி இன்று காலை அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முன்பு நடைபெற்றது. இதனை ஜி.ஆர்.டி கல்வி நிறுவன இயக்குநர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் ராமச்சந்திரன் ஒளி தீபம் ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
.jpg)
இந்த தூய்மை பணி நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முதல் தொடங்கி ஆர்.ஜி புதூர் வரை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாரும் சாலையில் ஓடி சென்றும் பொதுமக்களுக்கு தூய்மையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 1500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குழுவாக பிரிந்து கொண்டு சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். இப்பணி காலை 7 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
.jpg)
இது குறித்து கல்லூரி மாணவி கூறுகையில்; பாரத பிரதமர் அறிவுரையின்படி தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் எங்கள் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைத்து இப்பணியினை காலை முதல் செய்து வருகிறோம். எங்களுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தூய்மை பணியின் மூலம் பொதுமக்களுக்கு எங்களுடைய இந்த விழிப்புணர்வு சென்றடையும். கல்லூரி மாணவர்கள் இப்பணியை ஆர்வத்துடன் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
.jpg)