உடுமலையில் கருகும் நிலையில் நெற்பயிர்கள் - தண்ணீர் திறப்பை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை பாசனத்திற்குட்பட்ட பகுதியில், 850 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து இந்த மாதம் 28ஆம் தேதி முடிய மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 20ந்தேதி வரையில் தண்ணீர் திறப்பை நீட்டித்தால் மட்டுமே, சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.



உடுமலை அமராவதி அணையின் மூலம் சுமார் 57 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் பாசனவசதிபெற்று வருகின்றன. அமராவதி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அமராவதி ஆற்றின் கரையோர பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாசன வசதி, கால்நடைகளின் தாகம் தணிப்பதற்கு நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்து குளம், குட்டை, கிணறு போன்றவற்றின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுகின்றது.



இது தவிர வழியோரபேரூராட்சி, ஊராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்த காரணத்தால் அணை மூன்று முறை தனது முழு கொள்ளளவை எட்டியது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழையின்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 100 நாட்களைக் கடந்து 85 அடியாக நீடித்தது.

அமராவதி அணை பழைய ஆயக்ககட்டுபாசனத்தில் குமரலிங்கம் வாய்க்கால் பாசன பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் சுமார் 1350 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, தென்னை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, 850 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 135 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நெல் வகைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ள நிலையில், நெற்பயிர்களில் தற்போது கதிர் பிடிக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த மாதம் 28ஆம் தேதி வரை மட்டுமே அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக அரசாணை உள்ளது. இந்த நிலையில்அணைகளில் இருந்து மார்ச் மாதம் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே நெற்பயிரைக் காப்பாற்ற முடியும் என்றும், பால் பிடிக்கும் பருவத்தில் வயலில் தண்ணீர் இல்லாவிட்டால் பயிர்கள் சேதமாகிவிடும் எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



நெல் சாகுபடிக்காக ஏக்கருக்கு 35 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், எதிர்பார்த்த மகசூல் கிடைக்காவிட்டால் மீண்டும் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்றும், இதைத் தவிர்க்கும் வகையில், மேலும் இரண்டு மாதங்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொமரலிங்கம் வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் தற்பொழுது 65.85 அடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...