கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்கம்

கோவை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு புதியதாக பல் மருத்துவர் நியமிக்கப்பட்ட நிலையில், பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. தாமோதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை தொடங்கபட்ட பல் மருத்துவ சிகிச்சை பிரிவை எம்.எல்.ஏ தாமோதரன் இன்று திறந்து வைத்தார்.

கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் பல் மருத்துவர் பணியிடம் காலியாகவே இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக பல் சிகிச்சை பிரிவு தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இதனிடையே பல் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மருத்துவரை நியமித்து மக்கள் நல்வாழ்வுதுறை சமீபத்தில் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்கபட்டது.



இந்த நிலையில் இன்று பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் வேலுமணி உள்பட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...