தாராபுரத்தில் பருத்தி மறைமுக ஏலம் - ரூ.1.38 கோடிக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு சராசரி விலையாக ரூ.8050-க்கு விற்பனையானது. மொத்தம் 176.728 குவிண்டால் பருத்தியானது ரூ.1.38 கோடிக்கு ஏலம் போனது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை மறைமுக ஏலம் மூலம் நடைபெற்றது. இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 547 விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல், பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் வந்திருந்தனர். மறைமுக ஏலத்தில் பங்கேற்ற வணிகர்கள், பருத்தியை அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8699-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 6850-க்கும் சராசரி விலையாக ரூ. 8050-க்கும் ஏலம் எடுத்தனர்.

இந்த வார ஏலத்திற்கு 5, 464 மூட்டை பருத்திகள் வந்திருந்தன. 176.728 குவிண்டால் பருத்தியானது ரூ.1,38,99,520க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் 15வியாபாரிகள் மறைமுக பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனர். இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...