கோவை ஈஷா மையத்திற்கு நாளை ஜனாதிபதி வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஈஷா மையத்தில் நாளை நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவை வருவதை முன்னிட்டு, அவர் செல்லும் பாதையில் கோவை மாநகர போலீசார் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.



கோவை: ஈஷா மையத்திற்கு ஜனாதிபதி வருகையையொட்டி கோவையில் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நாளை நடைபெற உள்ளது.

இதையொட்டி நாளை (18-ந் தேதி) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அங்கு உள்ள ஆதியோகி சிலை முன்பு மஹாசிவராத்திரி விழா உற்சாகமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, தியானங்கள், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரம்பரிய கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சி என விடிய விடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்த நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் நாளை நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை அழைப்பாளராக ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து தனி விமானத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு புறப்படுகிறார். மதுரை விமான நிலையத்துக்குப் பகல் 11.45 மணி அளவில் வந்து சேருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து காரில் புறப்பட்டு 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலைச் சென்றடைகிறார். பூரண கும்ப மரியாதையுடன் கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சன்னதிகள் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். சுமார் 1 மணி நேரம் கோவிலில் இருக்கிறார்.

பின்னர் கோவிலிலிருந்து பிற்பகலில் மீண்டும் விமான நிலையம் புறப்படுகிறார். மதுரையிலிருந்து நாளை தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 3.10 மணிக்குக் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

அங்கிருந்து அவர், கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். அன்று இரவு, மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு தங்குகிறார்.



நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். குடியரசு தலைவர் செல்லும் பாதைகள் குறித்துத் திட்டமிடப்பட்டு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...