தாராபுரம் சின்னக்காளி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை - ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள்!

தாராபுரத்தில் உள்ள தென்தாரை ஸ்ரீசின்னக்காளியம்மன் கோயிலில் தமிழகத்தில் நல்ல மழை பெய்து, கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைக்ககோரி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ, சின்னக்காளி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 8வது ஆண்டாக 108 குத்துவிளக்கு 'பூஜை நடைபெற்றது.

சின்ன காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜைக்கு ராஜா (என்ற) கோவிந்தசாமி தலைமை வகித்தார். வ.உ.சி. பேரவைத்தலைவர் உலகநாதன், மணிகண்டன், சிவா, கார்த்தி, பாலு, சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். குத்து விளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து, கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும்,கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரவும் அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும்,



விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...