உடுமலை அருகேயுள்ள குரல்குட்டை பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒருகோடி கையெழுத்து இயக்கத்தில், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்.
உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட குரல்குட்டை பகுதியில் போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் துவங்கி நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை மூத்த தோழர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் செந்தில்குமார், நிதிஷ், தர்சன், பிரபாகரன், செல்லமுத்து, சுர்ஜித் உட்பட மக்கள் மத்தியில் துண்டறிக்கை கொடுத்து கையெழுத்து பெற்றனர்.
குரல்குட்டை, நால்ரோடு, நெசவாளர் பகுதி, காமாட்சி அம்மன் கோயில் உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வரவேற்று கையெழுத்திட்டனர்.