சைபர் குற்றவாளிகளிடம் உஷாராக இருக்க வேண்டும்..! - இளைஞர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

தமிழகத்தில் இளைஞர்கள் சைபர் குற்றவாளிகள் வலையில் சிக்குவதில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த கல்லூரி விழாவில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.



கோவை: பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் 25.வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, தமிழகத்தில் பத்தாயிரம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அடுத்த கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், உதவி ஆய்வாளர்கள் நியமிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, வரும் மார்ச் 1.ஆம் தேதி முதல் காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். 444 உதவி ஆய்வாளர்கள் நியமிக்க தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் 600 உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல்துறை பணிக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர் அவர்கள் கேட்பதற்கு முன்பே காவல்துறையில் பணி அமர்த்தும் பணிகள் நடைபெறும் வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் இளமையாக காட்சியளிக்கும்.

குறிப்பாக, காவல் நிலையங்களுக்கு வரும் பொது மக்களின் புகார்களை பெற்று குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காணும் நடவடிக்கையாக 2300 பேர் காவல் நிலைய வரவேற்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காவல்துறையினர் சேவை சிறப்பாக இருக்கும்.

செல்போன் பயன்பாட்டினால் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில் பலர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் தற்கொலை செய்ய நேரிடுகிறது. எனவே இளைஞர்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும்., என்றார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...