தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார கொண்டாட்டம் - கோவையில் விழிப்புணர்வுப் பேரணி!

தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமிழில் கையொப்பம் இடுவோம், தமிழர் நாம் என்று கூறுவோம், தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள் என்று வலியுறுத்தினர்.



கோவை: 1956ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி இயற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்ட நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.



அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.

முதல் நாளான இன்று கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கிவைத்தார்.



இந்தப் பேரணியில், அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமிழில் கையொப்பம் இடுவோம், தமிழர் நாம் என்று கூறுவோம், தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது போன்று தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி கலந்துகொண்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட இந்த பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிறைவடைந்தது.



முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். வரும் 28ஆம் தேதி வரை கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...