பெரும்பாண்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவையில் கூடினர். தொடர்ந்து, பன்னீர் செல்வம் அணியினரும், எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்டமன்றத்த்க்ல் கூடினர். காலை 11 மணியளவில் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் தொடக்கம் முதலே எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வேறு ஒரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க., காங்கிரஸ், மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முன் வைத்தனர். ஆனால், வாக்கெட்டுப்பு எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை சபா நாயகர் முடிவு செய்வார் என்றும், தனது இந்த முடிவில் தலையிட யாருக்கு அதிகாரம் இல்லை என்றும் சபா நாயகர் தனபால் கூறினார். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதை எதிர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைகளை தட்டியும், மேசைகள் மீது ஏறியும், சபா நாயகரின் மைக்கை உடைத்தும் அமளியில் ஈடுபட்டனர். இந்த கடும் அமளி காரணமாக சபையை 45 நிமிடங்கள் ஒத்திவைத்து சபா நாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால், மதியம் 1 மணி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.