கோவை மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுக்ககோரி போராட்டம் அறிவிப்பு

கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சரின் கவனத்தை எடுத்துச் செல்வதற்காக, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.


கோவை: கனிமவள கொள்ளையைத் தடுக்ககோரி தமிழ்நாடு-கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தவுள்ளோம்.

குறிப்பாக இந்த கனிமவளக் கொள்ளையில் வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் முக்கிய பிரமுகர்களின் பெயர்களைக் கூறி, கல்குவாரி அதிபர்களிடம் வசூலில் ஈடுபட்டு வருகிறார். சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளால் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிலங்கள் பாலைவனமாவது மட்டுமின்றி, நில அதிர்வுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி சட்ட விரோதமாகக் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...