சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் நாற்காலி, மைக்கை உடைத்தனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜையின் மீது ஏறி கோஷமிட்டார். இதற்கு திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சபாநாயகர் தி.மு.க எம்,எல்,ஏக்களை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற உத்தரவுவிட்டார். இந்நிலையில் திமுக எம்,எல்,ஏக்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டார். சட்டப்பேரவைக்குள் தரையில் அமர்ந்து மு.க.ஸ்டாலினுடன் திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது 20 திமுக உறுப்பினர்கள் உள்பட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது அவைக்காவலர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். சட்டமன்றத்தில் நடந்ததை விளக்கினார். தற்போது திமுக உறுப்பினர்கள் கவர்னரை சந்திக்க செல்வதாகவும் அவர் கூறினார்.