கோவை போத்தனூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த வியாபாரிகள் மகாலிங்கபுரத்தை சேர்ந்த கிஷோர், தேனியை சேர்ந்த பாண்டீஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது போலீசார் ரோந்து செல்வது வாடிக்கை. இந்த நிலையில், வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் முள்ளுக்காடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக இரண்டு நபர்கள் உலா வருவதைப் பார்த்தனர். இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், அந்த இரண்டு பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தது.
இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைதான இருவரில், ஒருவர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பதும், மற்றொருவர் தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாண்டீஸ்வரன் என்பது தெரியவந்தது.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.