தண்டவாளத்தில் 'வாக்கிங்' போன மக்னா யானை - நொடிப் பொழுதில் உயிர் தப்பிய வைரல் வீடியோ

கோவை மதுக்கரை அருகே தண்டவாளத்தில் மக்னா யானை ஏறி நின்றபோது, அந்நேரத்தில் ரயில் வேகமாக வந்துவிடவே சாதுரியமாக செயல்பட்டு வனத்துறையினர் விரட்டினர். உடனடியாக தண்டவாளத்தை விட்டு இறங்கி யானை உயிர் தப்பிய வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து மக்னா யானை கடந்த ஆறாம் தேதி பிடிக்கப்பட்டு கோவை வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி யானை வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி ஆனைமலை, புரவிபாளையம், கிணத்துக்கடவு வழியாக மதுக்கரை பகுதியில் சுற்றித்திரிந்தது.

கடந்த 21-ம் தேதி காலை யானை மதுக்கரை அருகே வாழைத் தோட்டத்தை கடந்து அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் மக்னா யானை ஏறி நின்றது.

அப்போது எதிர்பாராத விதமாக ரயில் வந்துவிடவே சாதுரியமாக செயல்பட்ட வனத்துறையினர், நொடிப்பொழுதில் மக்னா யானையை விரட்டினர்.



உடனடியாக தண்டவாளத்தை விட்டு இறங்கியதில் வேகமாக சென்ற ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்றது.

மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதும், திடீரென ரயில் வந்தபோது சாதுர்யமாக செயல்பட்டு வனத்துறையினர் அதை விரட்டி அடித்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...