கோவையில் யானை வழித்தடத்தில் சட்டவிரோத செயல்படும் 118 செங்கல் சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் துண்டிக்க மின்சார வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கோவையில் யானை வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் யானைகள் வழித்தடங்கள் பாதுகாப்பு, மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவையில் யானை வழித்தடத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டனர். மேலும் 118 செங்கல் சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் துண்டிக்கவும் உத்தரவிட்டது.
இதுகுறித்து வருகின்ற மார்ச் 6ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.