சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை, கோவையில் வைகோ கருத்து.


சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அரசியல் சூழல் குறித்து தாம் எந்தவிதமான கருத்துக்களையும் கூறவில்லை எனவும் இன்று சட்டமன்றத்தில் திமுக ரகசிய வாக்கெடுப்பு நடத்த விடுத்த கோரிக்கை நியாயம் இல்லை எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இன்று கடைபிடிக்கப்பட்ட நடைமுறைதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறிய அவர் ரகசிய வாக்கெடுப்பு என்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவிதமான சலுகையும் வழங்கப்படவில்லை எனவும் அவர் அப்போது தெரிவித்தார். எனவே இந்த கோரிக்கைகளை முன்வைத்து திமுக சட்டமன்றத்தில் நடத்திய விவாதங்களும், அமளிகளும் தேவையில்லாத ஒன்று எனவும் வைகோ அப்போது குறிப்பிட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...