கோவையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது - போலீசார் அதிரடி

கோவை கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் என்ற இளைஞரை கைது செய்த பெரியகடைவீதி போலீசார், அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், தனிப்படை போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று கஞ்சா, போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவற்றை விற்கும் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை பெரியகடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள கீரை தோட்டம் பகுதியில் போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பெயர் கார்த்திக் என்பதும், அவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.



இந்நிலையில் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பொட்டலம், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...