வசந்த காலத்தையொட்டி அனைவருக்கும் ஏற்ற வகையில் அழகான நவ நாகரீக ஆடைகளை மேக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசந்த கால ஆடைகளை அழகு ராணியும் திருமதி இந்தியா பட்டம் பெற்றவருமான ஜெயா மகேஷ் கோயம்புத்தூரில் அறிமுகம் செய்து வைத்தார்.

வசந்த காலத்தை கொண்டாடும் வகையில் இந்த ஆடைகள் வடிவமைப்பு உள்ளது. இந்த சீசனுக்கு ஏற்ற வகையில் இள நீலம் மற்றும் செர்ரி பழம் போன்ற சிவப்பு கலர்களில் இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆடைகளில் பல்வேறு விதமாக பிரிண்ட் செய்யப்பட்ட கிராபிக்ஸ், இயற்கை சார்ந்த டிசைன்கள் உள்ளது. அவை பார்ப்பதற்கு மிகவும் அழகான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற வகையிலான பிரத்யேகமான ஆடைகள் மற்றும் காலணிகளும் உள்ளது.

அறிமுக விழாவில் ஜெயா மகேஷ் பேசுகையில், காலத்திற்கேற்ற வகையில் சாதாரண மற்றும் தற்காலிக ஆடைகளை தயாரிப்பதில் மேக்ஸ் சிறந்து விளங்குகிறது. பேஷன் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும். உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஆடைகளும் மேக்சில் உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான கலெக்ஷன்கள் உள்ளன என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிராந்திய மேலாளர் ஹரிஷ் குமார் பேசுகையில், இந்த ஆண்டிற்கான மிகவும் மகிழ்ச்சியான நேரம் இது. வசந்த காலத்தை வரவேற்கும் ஒவ்வொரு நகரங்களுக்கும் ஏற்ற வகையில் `வசந்த கால கலெக்ஷன் 2017' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மேக்ஸ் ஆடைகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகிறது. இந்த பருவத்திற்கு ஏற்ற வகையிலான ஆடைகள் இங்கு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு

மெரினா லக்ஸ் என்னும் பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஆடையில் கோடுகள் போன்ற டிசைன்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. மிருதுவான பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆடைகள் நவீன டிசைன்களில் தயாரிக்கப்பட்டு அனைவரையும் கவரும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கலப்பற்ற துணிகளில் டிட்சி பூக்கள் மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் மிருதுவான பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் டிஜிட்டல் முறையிலும் மேலும் அதில் உள்ள டிசைன்கள் கையால் வடிவமைக்கப்பட்டு இந்த பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் பெண்களை கவரும் வகையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு

வரும் வசந்த காலத்திற்கு ஏற்ற வகையிலான ஆடைகள் இங்கு உள்ளன. இந்த ஆடைகள் வெள்ளை மற்றும் நீல நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இளஞ்சிவப்பு மற்றும் இள நீல நிறத்தில் இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு விதமான வண்ணங்களுடன் கூடிய ரிவர்ஸ் காலருடன் கூடிய டீ ஷர்ட்கள் இந்த பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் ஓய்வெடுக்கும் வகையில் பல்வேறு விதமான கிராபிக்ஸ் டிசைன்களில் இந்த டீ ஷர்ட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டீ ஷர்ட்களில் சிறிய படகுகள், சிறிய இலைகள் மற்றும் பூக்கள் மற்றும் வண்ண வண்ண ஏற்ற இறக்கமான கோடுகள் போன்ற டிசைன்கள், பனைமரம் போன்ற டிசைன்கள் உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில் ஆண்களுக்கான டீ ஷர்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசந்த கால டிசைன்கள் விடுமுறை நாளை அமைதியாக கழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆடைகள்

70களில் உள்ள வின்டேஜ் கிராபிக்சுடன் இந்திய ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டீ ஷர்ட்களில் ஜோத்பூர் அரண்மனை, பீரீசி லேயர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜாக்கெட்ஸ், நீளமான டூனிக்ஸ், கெடியா டாப்ஸ், ஷிப்ட் ஆடைகள், மிடி ஆடைகள் மற்றும் அம்பர் ஸ்விங் டூனிக்ஸ் ஆகியவை இந்த கலெக்ஷன்களில் மிகவும் முக்கியமானவை ஆகும். மிக்ஸ் அன்ட் மேட்ச்சில் வடிவமைக்கப்பட்டுள்ள டீ ஷர்ட்கள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
குழந்தைகள் ஆடைகள்
கண்களுக்கு குளுமை தரும் வகையிலான நீல கலரில் பல்வேறு பூக்களுடன் கூடிய ஆடைகள் பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை மிருதுவான பட்டுத் துணியால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவை தர்பூசணி கலர், இளஞ் சிவப்பு, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மஞ்சள், ஸ்ட்ராபெர்ரி இளஞ்சிவப்பு, டெனிம் நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலர்களில் பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு பல்வேறு விதமான பிரிண்டட் டீ ஷர்ட்கள் உள்ளன. மார்பு பகுதி மற்றும் கீழ் பகுதியில் பிரிண்ட் செய்யப்பட்ட டீ ஷர்ட்கள் உள்ளன. போலோ, கேரக்டர் டீ ஷர்ட், டைனமிக் கிராபிக்ஸ் டீ ஷர்ட், காமெடி கடல் கொள்ளையர்கள் குழு, கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்களின் படங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு கண்கவர் கலரில் பிரிண்ட் செய்யப்பட்ட டீ ஷர்ட்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ் பற்றி...

குடும்பத்திற்கு தேவையான ஆடை அலங்காரப் பொருட்கள் மற்றும் காலணி தேவைகளை பூர்த்தி செய்யும் முன்னணி பிராண்டாக மேக்ஸ் திகழ்கிறது. சிறந்த மதிப்புமிக்க நவீன ரக ஆடைகளை வழங்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் சர்வதேச தரத்தில் நவீன ஆடைகளை மேக்ஸ் விற்பனை செய்து வருகிறது. இன்றைய உலகிற்கு ஏற்ற வகையில் ஆடை, காலணி மற்றும் ஆபரண பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்டோர்கள் ஒவ்வொருவருக்கும் உலகத்தர ஷாப்பிங் அனுபவத்தை கொடுக்கும். மேலும் இங்கு குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். உலகம் முழுவதும் 16 நாடுகளில் 350 ஸ்டோர்களையும், இந்தியாவில் 60 நகரங்களில் 160 ஸ்டோர்களையும் மேக்ஸ் கொண்டுள்ளது. 2017ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 200 ஸ்டோர்களாக விரிவாக்கம் செய்ய மேக்ஸ் திட்டமிட்டுள்ளது.