வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் - செங்கல்பட்டில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தவர் கைது

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் வெளியிட்ட விவகாரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் போலீசார் கைது செய்தனர்.


தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இது பீகார் சட்டப்பேரவை வரை எதிரொலித்து பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது.

இதையடுத்து, தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதேபோல், பீகார் மாநிலத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 10 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் புலம்பெயர் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சிக்கிய உத்தரபிரதேச மாநில பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ், பத்து நாட்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, முன்ஜாமீன் உள்ளிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்ற நபர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழும் கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சியினரின் கண்டனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிவருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...