பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் புகையில்லா தேனி வளர்ப்பு பயிற்சி முகாம் - ஆர்வத்துடன் பங்கேற்ற விவசாயிகள்

பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற புகையில்லா தேனீ வளர்ப்பு பயிற்சி முகாமில், புகையில்லாமல் தேன் கூட்டிலிருந்து தேனை பிரித்து எடுக்கும் முறை குறித்து, வேளாண் பல்கலை மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று புகையில்லா தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, நூற்புழுவியல் துணை பேராசிரியர் முனைவர் கலையரசன் ஆகியோர் முகாம் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு புகையில்லாமல் தேனி வளர்ப்பு முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



தேன் எடுக்கும் கருவி, தேன் அடையெடுக்கும் கருவி, தேன் எடுக்க பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுவாக தேனீ வளர்ப்பில் தேன் எடுக்க தேன் கூட்டில் புகையிட்டு தேனீக்களை மயக்கமடைய செய்து தேன் எடுக்கும் போது தேனீக்கள் உயிரிழக்கவோ அல்லது கூட்டை விட்டு வெளியேறவோ வாய்ப்புள்ளது.



இதனால், தண்ணீர் அல்லது சர்க்கரை கரைசலை பயன்படுத்தி புகையில்லாமல் எப்படி தேன் எடுப்பது என்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது. கூடுதலாக இந்த பயிற்சி முகாமிற்கு வந்த விவசாயிகளுக்கு கிராம தங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் இனக்கவர்ச்சி பொறி வலை, நுண்ணுயிர் உரங்கள், தென்னை டானிக் பயன்பாடு குறித்த கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளிடையே கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பார்த்தீனிய செடிகளை எப்படி உரமாக்குவது என்பது குறித்தும் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...