வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றும் விசைத்தறி துறையை சிலர் ஒழிக்க முயற்சி - கொங்கு ஈஸ்வரன் காட்டம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாத சிலர், வடமாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றும் விசைத்தறி துறையை ஒழிக்கும் நோக்கில், வடமாநிலத்தவர்கள் தொடர்பாக வதந்தியை பரப்பியுள்ளதாக கொங்கு ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரியும் விசைத்தறித்துறையை ஒழிக்க சிலர்முயற்சித்து வருகின்றனர் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு விசைத்தறி கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, முதலமைச்சர், தன்னை நோக்கி வருகின்ற விமர்சனங்கள், பாராட்டுக்கள் அனைத்தையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொண்டு தன்னை முன்னிறுத்தாமல் தமிழ்நாட்டை முன்னிறுத்துகின்ற பண்பு தான் தமிழ்நாட்டில் இந்த 22 மாதகால வளர்ச்சிக்கான காரணமாக அமைந்துள்ளது.

இந்தப் பகுதி விசைத்தறி, கைத்தறி நிறைந்த பகுதி. தற்போது முதல்வர் விசைத்தறி, கைத்தறிகளுக்கு அறிவித்துள்ள அறிவிப்பை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மின்கட்டண உயர்வு என்பதே கிடையாது. மேலும் இந்நிகழ்வில் ஒருவரை கூட கட்சி சார்ந்து அமர வைக்கவில்லை.

இங்கு அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களும் விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் தான். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை விசைத்தறி ஒரு கண் என்று சொன்னால் விவசாயம் மற்றொரு கண்.

இவை இரண்டையும் காப்பாற்றும் பணியை முதலமைச்சர் கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார். மேலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றும் இந்த துறையை ஒழிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

அதற்கு காரணம், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை, தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளாக இருந்த நிலையை மாற்றி சீராகிறது என்று பொறுக்க முடியாதவர்கள் இந்த வட மாநிலர் பிரச்சனையை கிளப்பி உள்ளனர். வதந்தியை பரப்பியுள்ளனர்.

விசைத்தறிக்கு இருக்கின்ற சலுகைகளை ஆட்டோ ரூமிற்கும் தர வேண்டும். சோமனூர் பகுதியில் ஜவுளி சந்தை வேண்டுமென்ற 50 ஆண்டு கால கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

மேலும் விசைத்தறிகளுக்கு சோலார் பொருத்தப்படும் போது கிடைக்க வேண்டிய சலுகைகளையும் தருவதற்கு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...