வடமாநிலத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தின் போது, வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 153 (B) (c), 505(1) (c), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது, வடமாநிலத்தவர் மீது வழக்குகளை போட்டு சிறையில் அடைப்பேன் என பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என பேசியதாக சீமான் மீது 153 (B) (c), 505(1) (c), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இதே பொதுக்கூட்டத்தில் அருந்ததியர் குறித்து தவறாக பேசியதாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் ஒரு வழக்கு சீமான் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், சீமான் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...