வடமாநில தொழிலாளர்களை தாக்கியது இந்து முன்னணியை சேர்ந்தவர்கள்..! - கோவை ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி

வட இந்தியர்களை தாக்கிய வழக்கில் கைதான முருகன், பிரகாஷ் இருவரும் இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதற்கான ஆவணங்களும் செல்போனில் கிடைத்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கோவை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.



கோவை: கோவையில் வடமாநில தொழிலாளர்கள் பொதுவெளியில் தாக்கிய விவகாரத்தில், கைதானவர்களை, போலீஸ் கஸ்டடியில் எடுத்து தொடர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கமிஷ்னர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில் நேற்றிரவு டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவரில் ஒருவர் வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



நேற்றைய தினம் அச்சம்பவம் நடந்ததை தொடர்ந்து அப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையிலே வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.



அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து அரசு மற்றும் காவல் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

நேற்று நடந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் புகார்கள் இருந்தாலும் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சம்பவம் நடைபெற்ற போது கைது செய்யப்பட்டவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனை அடுத்து தற்பொழுது இதுகுறித்து மேற்கு வங்காள தொழிலாளர்களிடம் கலந்துரையாடியுள்ளோம். இந்த வழக்கில் பிரகாஷ் என்பவர் இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது செல்போனில் அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன.

இதில் சூர்யா என்கின்ற முருகன் ஏற்கனவே இந்து முன்னணியில் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காவல்துறையினரே தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அலைபேசி எண்கள் அச்சிட்ட கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இல்லை என்றாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக 100-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். சிறையில் அடைக்கப்பட்டவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துத் தொடர் விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...