கோவையில் இரவு ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு!

கோவையில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றம் நடக்காமல் தடுத்து குற்றவாளியை துரத்தி பிடித்து கைது செய்த காவலர்கள், சின்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.


கோவை: கோவையில் இரவு நேர ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் இருவரை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் நேரில் அழைத்து பாராட்டினார்.

மேட்டுப்பாளையம் உட்கோட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவலர்கள் சின்ராஜ் (PC 815) மற்றும் சீனிவாசன் (PC 930) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், அந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை தப்பிச்செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை காவலர்கள் இருவரும் துரத்தி சென்ற நிலையில், ஒருவரை பிடித்தனர். தொடர்ந்து அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் கத்தி, பெரிய இரும்பு கம்பி உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (30) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவுநேர ரோந்து பணியில் குற்றம் ஏதும் நடவாமல் தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டினார்.



மேலும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...