கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள காரேகவுண்டம்பாளையம் பகுதி மக்கள், பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதி செய்துதரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியுள்ளதாவது:- எங்கள் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் தினக் கூலிகளாக வேலை செய்து வருகிறோம்.

எங்கள் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு சென்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயின்று வருகின்றனர். ஆனால் எங்கள் ஊரிலிருந்து பள்ளியானது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பள்ளி செல்லும் எங்களது குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் பள்ளத்திலும், கரடு முரடான பாதைகளிலும் பயணித்து தினமும் பள்ளி சென்று வருகின்றனர்.
அவர்கள், தினமும் இவ்வாறு நடந்து செல்வதால் உடல்நிலை சரியில்லாமல் போவதும் அடிக்கடி நடக்கிறது. இதனால் அவர்களது பள்ளி படிப்பு பாதிக்கப்படுகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பகுதிக்கு வாகன வசதி செய்துதர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.