2016 அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை என திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலுக்கான பணிகளை 31 டிசம்பர் 2016 தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, உயர்நீதி மன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்து விலக்கம் கேட்டது.
இதற்கு பதிலளிக்கும் போது மாநில தேர்தல் ஆணையமானது, பொது தேர்வுகள் நடைபெறுவதையொட்டி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், வரும் 2017 மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, நீண்ட மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வரும் மே 15 ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக அமைந்துள்ளது.