ஈஷா‌ உதவி இல்லாமல்‌ நாங்கள்‌ படித்திருக்க வாய்ப்பில்லை - சத்குருவிற்கு பழங்குடி மாணவிகள்‌ நன்றி!

பொருளாதாரத்தில்‌ மிகவும்‌ பின்‌ தங்கியுள்ள மாணவ - மாணவிகளுக்காக கோவை ஈஷா யோகா மையத்தின் அவுட் ரீச் அமைப்பின் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் விழாவில் உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவிகள் சத்குருவுக்கு நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவையில் ஈஷா அவுட் ரீச் அமைப்பின் மூலம் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவிகள் சத்குருவுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

ஈஷா அவுட்ரீச்‌ அமைப்பு சார்பில்‌ ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும்‌ நிகழ்ச்சி ஈஷாவில்‌ உள்ள சிவாங்கா குடிலில்‌ நேற்று (மார்ச்‌ 19) நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை‌ சேர்ந்த மாணவ, மாணவிகளும்‌, அவர்களின்‌ பெற்றோர்களும்‌ பங்கேற்று தங்களின்‌ அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்‌.

இந்த நிகழ்வில், நல்லார்‌ பதி பழங்குடி கிராமத்தை‌ சேர்ந்த மாணவி சஜிதா பேசியதாவது‌, நான்‌ ஒன்றாம்‌ வகுப்பில்‌ இருந்து 12-ம்‌ வகுப்பு வரை ஈஷா வித்யா பள்ளியில்‌ முழு கல்வி உதவி தொகையில்‌ படித்தேன்‌. இப்போது நான்‌ அவிநாசிலிங்கம்‌ கல்லூரியில்‌ பி.காம்‌ சி.ஏ இரண்டாம்‌ ஆண்டு படித்து வருகிறேன்‌.

ஈஷாவின்‌ கல்வி உதவி தொகையால்‌ தான்‌ பள்ளி படிப்பு மட்டுமின்றி கல்லூரி படிப்பையும்‌ தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்‌. கல்வி உதவி தொகை மட்டுமின்றி டி.என்‌.பி.எஸ்‌.சி, எஸ்‌.எஸ்‌.சி போன்ற அரசு தேர்வுகளுக்கு ஈஷா மூலம்‌ எங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்‌.

ஐ.ஏ.எஸ்‌ ஆக வேண்டும்‌ என்பது என்னுடைய ஆசை. அதற்கு நான்‌ என்னை தயார்‌ செய்து வருகிறேன்‌. சத்குருவின்‌ அருளால்‌ தான்‌ இவை அனைத்தும்‌ நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. எனவே, சத்குருவிற்கும்‌ ஈஷாவிற்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்‌. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல்‌, முள்ளாங்காடு பழங்குடி கிராமத்தைச்‌ சேர்ந்த நந்தினி பேசியதாவது‌, எனக்கு அப்பா, அம்மா இல்லை. பெரியம்மாவும்‌, பாட்டியும்‌ தான்‌ என்னை பார்த்து கொள்கிறார்கள்‌.

ஈஷாவின்‌ உதவியுடன்‌ கோவை பி.எஸ்‌.ஜி பள்ளியில்‌ 6-ம்‌ வகுப்பு முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை விடுதியில்‌ தங்கி படித்தேன்‌. இப்போது கோவை கலைமகள்‌ கல்லூரியில்‌ மூன்றாம்‌ ஆண்டு படித்து வருகிறேன்‌. ஈஷாவின்‌ உதவி இல்லாமல்‌ நான்‌ படித்திருக்க வாய்ப்பில்லை. ஈஷாவிற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.



இந்நிகழ்ச்சியில்‌ கோவை ஈஷா வித்யா பள்ளியின்‌ முதல்வர்‌ சாவித்ரி, கலைமகள்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ மாலா, முகவரி அறக்கட்டளையின்‌ நிர்வாகி ரமேஷ்‌, ஈஷா பிரம்மச்சாரி சுவாமி அலோகா ஆகியோர்‌ சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்‌ தொகைக்கான காசோலைகளை‌ வழங்கினர்‌.



தொண்டாமுத்தூர்‌ பகுதி கிராமத்தில்‌ வாழும்‌ மாணவர்களுக்கு கல்வி உதவித்‌ தொகை வழங்குவது மட்டுமின்றி பல்வேறு வழிகளில்‌ ஈஷா உதவி வருகிறது. கோவை சந்தேகவுண்டம் பாளையத்தில்‌ உள்ள ஈஷா வித்யா பள்ளியில்‌ பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி, உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும்‌ இலவசமாக வழங்கப்படுகிறது.



போக்குவரத்து வசதி இல்லாத தொலைதூர மலைவாழ்‌ கிராமங்களில்‌ இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்‌ மாணவர்களுக்கு ஈஷாவின்‌ வாகனங்கள்‌ மூலம்‌ தினமும்‌ போக்குவரத்து வசதி வழங்கப்படுகிறது. மேலும்‌, பள்ளி மாணவர்கள்‌ NMMS என்ற தேர்வு எழுதி ஆண்டுதோறும்‌ ரூ.12 ஆயிரம்‌ கல்வி உதவி தொகை பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தவிர, கல்லூரி படிக்கும்‌ மாணவர்களுக்கு அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும்‌ நடத்தப்படுகிறது. தாணிக்கண்டி மலைவாழ்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த மாணவி பிரேம குமாரி நீட்‌ தேர்வுக்கான பயிற்சி பெறுவதற்கும்‌ உதவி வருகிறது.



மேலும்‌, அவர்களிடம்‌ கலை ஆர்வத்தை அதிகரிக்கும்‌ வகையில்‌, பரத நாட்டியம்‌ மற்றும்‌ நாட்டுப்புற நடனப்‌ பயிற்சியும்‌ வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...