ஓராண்டில் ஒருகோடி மரக்கன்றுகள் நடவு - ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

உலக வன தினத்தையொட்டி கடந்த ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் விவசாயிகளின் உதவியுடன் விவசாய நிலங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.


கோவை: ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.



அதன்படி, உலக வன தினத்தையொட்டி தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் (2022-2023) ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்புடன் அவர்களின் நிலங்களில் நடவு செய்து புதிய சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாககாவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன்கூறியதாவது, நாங்கள் 2004ஆம் ஆண்டு முதல் மரம் சார்ந்த விவசாயம் செய்யும் விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். இதன் பயனாக, இதுவரை 8.4 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்போடு நடவு செய்துள்ளோம்.

1,68,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயம் பற்றி தெரிந்துகொண்டு, அவர்களது நிலத்தில் மரங்களை நடவு செய்துள்ளனர். குறிப்பாக, மரம் சார்ந்த விவசாயம் மூலம் காவேரி நதியை மீட்டு எடுப்பதற்காகவும், அதைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை சத்குரு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார்.

இவ்வியக்கத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயித்து இருந்தோம்.

தமிழ்நாட்டில் சத்குரு ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வின் தாக்கத்தாலும், ஈஷா தன்னார்வலர்களின் செயல்பாட்டாலும். இந்த இலக்கை நாங்கள் மார்ச் 20ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளோம்.

இதேபோல், கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு 1.30 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மரம் சார்ந்த விவசாய முறையின் பயன்கள் குறித்து கூறியதாவது, அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்களின் வரப்பு ஓரங்களில் மரங்களை நடலாம். அதிக நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகள், அவர்களின் மொத்த நிலத்தில் குறைந்தபட்சம் மூன்றில் பங்கு நிலத்தில் மரங்கள் நடலாம்.

மேலும், நிலம் முழுவதும் மரங்களை நடவு செய்து, மற்ற பயிர்களை ஊடுபயிராகயும் சாகுபடி செய்யலாம். இவ்வாறு விவசாயிகளின் தேவைக்கேற்ப பல்வேறு விதமாக மர விவசாயம் செய்ய முடியும். மர விவசாயத்திற்கு மாறுவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 3 முதல் 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுமட்டுமின்றி, மரங்களில் சமவெளில் வளர கூடிய மிளகு ரகங்களை சாகுபடி செய்வதின் மூலம் கூடுதல் தொடர் வருமானத்தையும் பெற முடியும். மானாவாரி விவசாய நிலங்களிலும் மர விவசாயம் செய்வதற்கான தொழில் நுட்பங்களை ஈஷா வழங்கி வருகிறது.

ஒவ்வொரு தனி விவசாயிக்கும் ஏற்ற வகையில், மண்ணுக்கேற்ற மரங்களை நாங்கள் பரிந்துரைத்து வருகிறோம். விவசாயிகளுக்கு தேவையான டிம்பர் மரக்கன்றுகள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 40 ஈஷா நாற்று பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு மரக்கன்றுகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு மரக்கன்று, ரூ.3 என விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்துவரும் மழைக்காலத்துக்கு தேவையான மரக்கன்று உற்பத்திக்கான ஆயத்த பணிகளையும் தற்போது துவங்கியுள்ளது.

மர விவசாயம் குறித்த இலவச ஆலோசனைகள் பெறுவதற்கும், மரக்கன்றுகள் பெறுவதற்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...